Tuesday, October 22, 2013

ரொம்ப தேங்கஸ் ஜாக்கியன்னா

சென்னை அதன் மாலை நேர இயக்கத்தில் குறியாய் இருந்தது....

நேற்று  இரவு எட்டு மணி... அந்த நபர்    தனது தள்ளு வண்டியை தள்ளிக்கொண்டு வியர்வை வழிய கேகே நகர் சிவன் பார்க் அருகே தள்ளிக்கொண்டு நடந்து சென்றுக்கொண்டு இருந்தார்....

முதலில் அவரை நான்  தாண்டி சென்றாலும் மனது கேட்கவில்லை... ஒருவேளை பெட்ரோல் இல்லையென்றால் அந்த நபர் எவ்வளவு தூரம் நடந்து செல்ல  வேண்டி வரும்? பக்கத்தில் பெட்ரோல் பங்கும் இல்லை...



காலையிலேயே மனைவியிடம் விளக்குமாத்து பூசை வாங்கியாகிவிட்டது ...வீட்டுக்கு அவசரமாக போய் பெரிய வேலை இல்லை என்பதால் அந்தநபர்   நடந்து வர  காத்திருக்க ஆரம்பித்தேன்...

இது போல வலிய உதவி செய்ய போகும் போது இருக்கும் பெரிய  பிரச்சனை என்னவென்றால்..?  இது போன்ற நபர்கள் நம்மை தோஸ்த்தானாவாக  நினைத்துக்கொண்டு  நம்முடைய வாயில் வெற்றிலை பாக்குபோட வைத்து விடுவார்கள்.

நானும் நண்பர் தள்ளுவண்டி தங்கராசுவும் 

நாய் நக்கும் இயல்புடையது .... நான் காப்பாற்றும் இயல்புடையவன்(அடுத்தவன் காசில்)   என்ற அந்த சித்தாந்தத்தை ஒரு சில இடங்களில் நான்பிரயோகப்படுத்தி ஆசுபத்திரியில் அட்மிட் ஆகியவன் ...ஒரு வேளை அந்ததள்ளுவண்டிமீன்பாடி  வண்டியாக இருந்தால் அய்யகோ.....இப்படி முட்டாள்தனமாக உளறிவிட்டு காரணமே இல்லாமல்   சரி கிளம்பலாம் என்று நினைத்தேன்...

 ஒருவேளை அந்த நபருக்கு இன்று தேர்வு ஏதேனும் இருந்தால்  லேட்டாகிவிடுமே இன்னும் அந்த  வேதனையோடு எவ்வளவு தூரம் நடக்க வேண்டுமோ? என்று  யோசித்த காரணத்தால் நின்று வெயிட் செய்தேன்...


த்தா என்ன பிரச்சனை. பெட்ரோல்  இல்லையா?

பங்க் பக்கத்துல எதுவும்  இல்லை... நான் வேணா வாங்கி வரட்டா...

இல்லைங்க  இன்னும் ரெண்டு தெரு தள்ளிதான் வீடு... தம்பிக்கு போன் செஞ்சி இருக்கேன்...  வந்துக்கிட்டு இருக்கான்...

அப்ப சரிசார் ... நான் கிளம்பறேன்....

அண்ணா.....

நான் திரும்பினேன்...



பொளேர் என கன்னம் பழுத்தது ...ஏன்டா   நானும் 40 வருஷமா தள்ளு வண்டி தள்ளிகிட்டு இருக்கேன் மனநிலை பிறழ்ந்தவன் கூட பெட்ரோல் இல்லையான்னு  கேள்வியை கேட்டதில்ல போ அந்தால என் தாக்கத்தொடங்கினார்.

ரொம்ப தேங்கஸ்ண்ணா என்றேன் .....

ஏன்டா இந்த அடி அடிக்கிறேன் தேங்கஸ்கிற என்றார் 

இல்ல தினுமும் பொண்டாட்டி அடிப்பா இன்னிக்கு நீங்க அடிச்சு ஒரு மாறுதல் குடுத்துருக்கிங்க அதான் என்றேன் 

 அண்ணா என  அழைக்கு சில அழைப்புகளில் பாசமும், நேசமும் , கனிவும் ஒளிந்து இருக்கும்.

ஆனாலும் அடி தொடர்ந்தது. நடைபாதை மக்களும் ஆளுக்கு ஒரு கை போட்டனர் 

இந்த  தேங்ஸ்ண்ணாவில் எல்லாமும் உணர்ந்தேன்..(என்னா அடி )



பிரியங்களுடன்
சாம் .


Thursday, October 3, 2013

இதுக்கு முன்ன ஊர்ல கட்டவண்டி ஓட்டினியா.... Altered

ஓசூரில் இருந்து பெங்களுருக்கு சேலம் கோட்ட அரசு பேருந்தில் நான் (வழக்கம் போல ஓசியில்) பயணம் செய்தேன்.. அப்போது பேருந்து வெகு நேரம் டிக்கெட் ஏற்றிக்கொண்டு இருந்தது.. டிரைவர் வண்டியை அரக்கி அரக்கி நகர்த்திக்கொண்டு இருந்தார்... டிக்கட் வாங்கிக்கொண்டு பேருந்தில் உட்கார்ந்திருந்தவர்களை பார்க்கும் பொது எனக்கு சிரிப்பு சிரிப்பாக வந்தது. 



சரி போனால் போகின்றது என்று அமைதியாக இருந்தால் பைபாஸ் பாலங்களை தவிர்த்து கர்நாடக எல்லையில் இருக்கும் சின்ன சின்ன ஊர்களில் எல்லாம் நிறுத்தி மெஜஸ்ட்டிக் மெஜஸ்ட்டிக் (ஏதாவது பிட்டு பட தலைப்பாக இருக்குமோ?)என்று தொண்டை தண்ணி வற்றுவது போல கத்திக்கொண்டு இருந்தார்...

நான்  பேருந்தில் கண்டக்டர் உட்காரும் முன் சீட்டில்  உட்கார்ந்து கொண்டேன்..டிரைவர் ஹான்சை வாயில் அடக்கி கொண்டு சாது போல அமைதி காத்த படி பேருந்தை ஓட்டினார்...டிக்கெட் போட்டு ஸ்டெஜ் குளோஸ் செய்து விட்டு மேல் வந்து கண்டக்டர் தனது இருக்கையை கேட்டார். சட்டம்  பேசினேன் அடித்து துவைத்து துரத்தி விட்டனர்.... இருந்தும் பஸ்ஸில் 45 வயது மதிக்கத்தக்க இரண்டு ஆண்டிகள் இருந்ததால் நான் என்ஜீன் சூட்டை சூ****க்கு குடுத்தவாறே அவரிடம் பேச்கிக்குடுக்க ஆரம்பித்தேன் 

அந்த இருவர் 


ஏன் இத்தனை ஸ்டாப்பில் நிறுத்தி செல்லுகின்றீர்கள் என்று கேட்டதுதான் தாமதம்.. மடை திறந்த அணையில் இருந்து சீறிப்பாயும் நீரை போல அந்த டிரைவரும் கண்டக்டரும் சேர்ந்து என்னை அடி பிரட்டி எடுக்க ஆரம்பித்து விட்டார்கள். அந்த டிரைவர் போட்டிருந்த மாவாவை துப்பி அடித்தார்...

ஏன்டா காசு குடுத்து டிக்கெட் எடுதவங்களே பொத்திக்கிட்டு வராங்க  ஓசில  வர்றவன்  உனக்கு என்னடா பெரிய காரணம் சொல்லனும்னு  அடி அடின்னு அடிச்சுட்டாங்க 

நான் சொன்னேன் :நாங்களும் மனுங்கதான் சார்.. வேனும்னேவா டிக்கெட் எடுக்காம வர்றோம் ...?? என்ன செய்ய???  சில பொறம் போக்குங்க படிச்ச திமிர்ல எங்களை வாட்டி எடுக்கறானுங்க..?? சார் டிக்கெட் சார் டிச்கேட்ன்னு  கேட்டு வாங்கிடராணுக.
அவனுக டிக்கெட் எடுக்கரதுனால எங்களுக்கு கெட்டபேர்.....  
ஐ டீ ல வேலை செய்யிரவங்கலாலதான் சான் டிக்கட் காசு அதிகமாயிருக்கு..

MISSION 

சார் நாளும் கிழமைன்னா பராவாயில்லை இல்லை விடுமுறை நாள் என்றால் கூட டிக்கெட் வாங்க சொன்னா எப்படி?

கூட்டம் அலை மோதும் அன்னிக்கு பிரச்சனை இல்லை.. ஆனா சாதாரண நாளில் 
டிக்கெட் எடுன்னு சொன்ன நாங்க என்னசார் செய்யறது..????

தனியார் பஸ் டிக்கெட் வாங்கறாங்கன்னு சொல்றாங்க .. ஏன் இருக்காது... இங்க மெயின்டெயின் செய்யவும் ஸ்பேர் பார்ட்டஸ் மாத்திகொடுக்கவும் நாங்க டிக்கெட் எடுக்கணுமா...? என நியாயமான வாதங்களை முன்வைத்தேன்.


இவ்வளவு பேசியும் அவர்கள் என்னை ஒன்னும் சொல்லவில்லை ஏனென்றால்  நண்பன் வித்தவுட் வீராசாமி அவர்கள் எனக்கு ஆதரவாக பேசியது ஒரு காரணமாக இருக்கலாம்.(அவருக்கு என்ன அன்பு நன்றிகள்)

அவர்கள் பொறுமையாக  இருந்தது எனக்கு பிடித்திருந்தது திடீரென  "இதுக்கு முன்ன ஊர்ல கட்டவண்டி ஓட்டினியான்னு" சொல்லிட்டு இறங்கி ஓடினோம் நானும் நண்பர் வித்தவுட் அவர்களும் ..

ஆனால் துரதிர்ஷ்டம் விரட்டி பிடித்து விட்டனர் 

"20 வருஷம் ஓட்டி சர்விஸ் வச்சி இருக்கும் டிரைவர்கிட்டயாடா மோதுர"ன்னு .... மடிவாலாவிலிருந்து ஜெயநகர் வரை விரட்டி தர்ம அடி அடித்து துவைத்து  எடுத்து விட்டனர் (அவர்களுக்கு என் வணக்கங்கள்)....

நானும் நண்பரும் கதறி அழுதோம் 

அடியேனும் நண்பர் வித்தவுட்டும் பெங்கலூரில் 


பொதுமக்களுக்கு ரயில் எப்படியோ அப்படித்தான் பஸ்சும் .. ஆனா  எங்களை விட திருட்டு ரயில் பயணம்  செய்பவர்களுக்கு , எங்களை விட சிரமம் 
கம்மி.. ஆனா எங்களுக்கும் அவுங்களை விட சிரமம் அதிகம்.

டீ விலை இரண்டு ரூபா வித்த காலத்துல இருந்து நாங்க ஓசியில தான் டீ குடிக்கறோம் ..இன்னைக்கு அப்படியா டீ ஐந்து ரூபாய்க்கு விக்கறான்(அவன் எவ்வளவுக்கு  வித்தா எனக்கென்ன நமக்கு எப்பவுமே ஓசி டீ தான் ) என்று சம்மந்தம் இல்லாமல் பேசியபடியே பயணம் தொடர்ந்தது.... 

கடைசியாக பேருந்து நின்றதும் அதுக்குள்ளே சென்னை வந்துருச்சான்னு கேட்டது தான் மிச்சம் மொத்த பேருந்து நிலையமும் செருப்பால் அடிக்க தொடங்கிவிட்டனர்...... நண்பர் வித்தவுட் உட்பட அப்போ தான் கண்டக்டர்  சொன்னார்.

மறைந்திருந்து பார்க்கும் மர்மத்தின்போது 


"ஏன்டா முக்கா மொட்டையா நான் அங்க இருந்து 
பைபாஸ் பாலங்களை தவிர்த்து சின்ன சின்ன ஊர்களில் எல்லாம் கூட  நிறுத்தி மெஜஸ்ட்டிக் மெஜஸ்ட்டிக் என்று தொண்டை தண்ணி வற்றுவது போல கத்திக்கிட்டு இருக்கேன் இங்க வந்து சென்னைனா கேக்குற? என்றார்.....


இப்ப்போ சொல்லுங்க நண்பர்களே நான் செஞ்சது தப்பா????????????

டிஸ்கி: இன்னும் ஒரு வாரம் மெஜஸ்ட்டிக் பேருந்துநிலையம் அருகில் உள்ள சிட்டுகுருவி லாட்ஜ்  அறை எண் 318  வாசலில் தங்கி இருப்பேன் சந்திக்க விருப்பமிருப்பவர்கள் ட்வீட்டவும்.....    

நன்றிகளுடன் 
சாம் 

Indli