Thursday, September 27, 2012

மான் வெஜ் ஆனா நான் நான்வெஜ் (27/09/1947) ப்ளூட்டோ




கூடங்குளத்தில் சொந்த   நாட்டு மக்களையே அடித்து தும்சம் பண்ணி இருக்கின்றார்கள்…
இந்த செய்தியை கேட்டதும் கூடங்குளத்தை தனி நாடக அறிவிக்கும்படியான கோரிக்கையுடன் ராஜபக்‌ஷேவை சந்திக்க சென்றேன் வெலிகடா
(Welikada ) ஜெயிலில் சாணி அள்ள வைத்திருக்கிறனர்.

*********************************************************************

அதிமுக  ஆட்சிக்கு வந்து    ஒன்றரை வருடங்கள் ஒடி விட்டன…. நாங்கள் ஆட்சிக்கு வந்தால்   ஆறு மாதத்தில் மின்வெட்டை போக்குவோம் என்றார்கள். இன்னும்  மின் வெட்டை சரி செய்த பாடில்லை… இதை எந்த ஊடகமும் கேட்க வக்கில்லை…  பல சிறு தொழில்கள் பாதிக்கப்பட்டு இருக்கின்றன..  அது கூட பராவாயில்லை.. நேற்று காலை பல் துலக்காமல் சாப்பிட அமர்ந்தேன் மனைவி கண்டுபிடித்து

”ஏண்டா பல் விளக்காமல் சாப்பிட வந்தாய்” என்றார்..



ஊஞ்சல் ஆடும்போது எடுத்தது 


கரண்டு இல்லத்ததால் என்றேன்.

 கரண்டுக்கும் பல்லு விளக்குவதற்க்கும் என்ன சம்மந்தம் என்றார்

 நான் உடனே சைக்கிள் டையனமோவில் பல் போன்ற அமைப்பு நீரின் உதவியால் சுழல்வதனால் மின்சாரம் வரும். அதேபோல்  இன்று மின்சாரம் இல்லாததால் நான் எனது பல்லை நீர் வைத்து சுழற்றவில்லை என்றேன்.

வெளக்காத பல்லுக்கு அறிவியல் விளக்கமா என விளக்கமாற்றால் விளாசி

சங்கிலியில் பிணைத்து வெயிலில் வாழைமரத்தில் கட்டிப்போட்டிருக்கின்றார். நண்பர்கள் வந்து காப்பாற்றவும்.


*********************************************************************



திரும்பவும் பெட்ரோல்  விலை 5 ரூபாய்க்கு ஏற்றப்போவதாக பெட்ரோலியா(மங்கோலியாவில் அண்டை நாடு)  நிறுவனங்கள் கொஞ்சிக்குலாவி அறிவிக்க  இருக்கின்றன… திரும்ப 78 ரூபாய் லெவலுக்கு போவும்ன்னு நினைக்கிறேன்.. இருந்தாலும் வண்டி ஓட்டித்ன் ஆவனும் இல்லைன்னா லாஸ் ஆப் பே தான். என்று ரோட்டில் ஒருவர் புலம்பிக்கொண்டிருந்தார்.



உடனே நான் பெட்ரோல் விலை ஏறினால் ஆப்பேக்கு (PIAGGIO APE) எப்படி லாஸ் ஆகும்? அது டீஸலில் தானே ஓடுகிறது என என்னுடைய எதிர்ப்பை நியாயமாக பதிவு செய்தேன்.

காதை கடித்து வைத்துவிட்டார்........
இது போன்ற மூடர்களை என்ன செய்வது?


*********************************************************************


கூடங்குள மக்கள் வாழ்வாதார பிரச்சனைக்கு போராடிக்கொண்டு இருக்கும் போது ஸ்ரீரங்கத்தில் தொடர்ச்சியாக அன்னதான விழாவை இனிதே நடத்தி நம்மை மெய் சிலிர்க்க வைத்து  இருக்கின்றார்... நம் முதல்வர் ஜெ  இந்த விஷயம் அறியக்கிடைத்ததும் உடனடியாக ஸ்ரீரங்கம் சென்று அன்னதானப்பந்தலை வட்டம் சுற்றத்தொடங்கினேன்.

மம்மியின் பாதுகாவலர்கள் பெட்டக்ஸில் எத்தி கால்வாயில் தள்ளினர்.
உடனே அங்கேயே உட்கார்ந்து பிடில் வாசிக்க தொடங்கினேன் முதல்வரின் பாதுகாப்பு கருதி வண்டலூர் பூங்காவில் கூண்டு எண் 19 ல் அடைத்துள்ளனர்




*********************************************************************
ஜெமினி பிளை ஓவர் கிட்ட இருக்கற பார்க் ஓட்டல்  கிட்ட ரைட் கட் பண்ணி சேம வேகத்துல வந்துகிட்டுஇருந்தேன்.. இரண்டு பேர் என்னை துரத்திகிட்டு  டேய் டேய் பண்ணாடன்னு கத்திகிட்டு  வந்தாங்க...  நானும் கடன்காரர்களாக இருக்குமோ என்று வேகமாக கொரங்கு பெடல் போட தொடங்கினேன் .
வாசகர்களுடன் அடியேன் :)))))

                                   
வள்ளுவர் கோட்டத்துகிட்ட வண்டியை நிறுத்தினேன்.. சார் நான் உங்க  வலை ரசிகர்...என்று பெயர் சொன்னார்...

அய்யோ நான் மீன் பிடிப்பதில்லையே என்றேன். பிடித்து பரங்கிமலையின் உச்சியிலிருந்து உருட்டி விட்டனர் 




*********************************************************************
நான்வெஜ் 18+


கிரிக்கெட் ஃபீவர் அடிக்கிறது என்று நண்பர் சொன்னார் உடனே க்ரோஸினுடன் அவரை பார்க்க சென்றேன் அசிங்கமாக திட்டினார் உடனே அவரை பழிவாங்க வேண்டி ஃபேஸ்புக்கிலிருந்து அவரை அன்ஃப்ரெண்ட் செய்து விட்டு கிரிக்கெட் என கூகுளில் தேடத்தொடங்கினேன்

”கிரிஜாவில் கிரவுண்டில் ஒரு கிரிக்கெட் மேட்ச்”

என்னும் கதையை படித்துக்கொண்டிருந்தேன் வேலையை விட்டு எடுத்திருக்கின்றனர்.

எனது வாசகர் வண்ணமுத்து



கிரிக்கெட் உலகக்கோப்பை நடக்கும் போது கூட கிரிக்கெட் பத்தின பதிவுகள் படிக்கக்கூடாதா... என்னா உலகம்டா இது?*********************************************************************

சமீபத்தில் பார்த்த வீடியோ, பதிவுலக பின்னூட்ட சண்டைகளை நினைவுபடுத்தியது

                                         
*********************************************************************
அன்புடன்

சாம் ஆண்டர்ஸன்

Tuesday, September 11, 2012

வெளிக்கிருப்பவர்-( Dirty-செய்பவர்) வாழ்க்கை அறியாத தகவல்கள்

சாரு நிவேதிதா எழுதிய தேகம் நாவலில் மலம் அள்ளுபவர்கள்  பற்றி எழுதியதை வாசித்துள்ளீர்களா? படித்துப் பாருங்கள். வாசிக்கும்போதே வயித்தை  பிசையும் எழுத்து. மலம் அள்ளுபவர்கள்  என்போர் எத்தனை பரிதாபமான ஜீவன்கள் என்று தெரியும்.

ஆனால் இன்று நாம் மலம் அள்ளுபவர்களைப்பற்றி பார்க்கப்போவதில்லை மாறாக ரயில்வே ட்ராக்கில் வெளிக்கிருப்பவர் ஒருவரை பேட்டி காணப்போகிறோம்




அந்த நபரை ஒரு ஞாயிறன்று வீட்டில் சமையல் செய்ய கழுதைக்கறி வாங்கி விட்டு திரும்பும் வழியில் பார்த்தேன். ஒல்லியான உருவம். கையில் சொம்பு. கைலியை பின்னாடி படாமல் தூக்கிப்பிடித்திருந்தார். மிக மெதுவான  நடை. அவருடன் பேசினால் என்ன என தோன்றியது. சைக்கிளுக்கு ஸ்டாண்ட் போட்டு நிறுத்தி விட்டு, நான் ஹிந்தியிலும் அவர் தமிழிலும் பேச , ஒரு நிமிடம்கூட தாக்கு பிடிக்க முடிய வில்லை. கடுப்பானவர் கைலி நாஸ்தி ஆனாலும் பரவாயில்லை என்று சொல்லி கன்னத்தை சேர்த்து ஒன்று கொடுத்தார்.

”நானே சொம்புல இருந்த தண்ணி கொட்டிப்போச்சுன்னு கழுவாம கூட வந்துட்ருக்கேன் என்கிட்ட வந்து கன்னடத்துல பேசிக்கிட்டு போ அந்தால” என அன்பாக மிரட்டினார்

இது சரிப்படாது என புரிந்து சற்று தூரமாக சென்று அவரை ”போடா வெண்ன” என்று திட்டிவிட்டு மின்னல் வேகத்தில் சைக்கிளை மிதித்து பறந்தேன். ஆனாலும் அவரின் அந்தக்கோலம் என் மனதில் பசுமரத்தாணி போல பதிந்த்தது .

 என்னுடைய மொபைல் கேமராவில் எடுத்தது :)

அவரை எப்படியாவது பேட்டி எடுத்து விட வேண்டும் என்று மாரி அம்மன் கோவிலுக்கு சென்று கங்கணம் கட்டிக்கொண்டு அவரை தேடத்தொடங்கினேன்.

கடைசியாக இன்று காலை அண்ணா நகர் ரவில்வேகேட் அருகில் உள்ள புதர் மறைவில் உட்கார்ந்திருந்த அவரை கையும் களவு(!)மாக பிடித்து என்னுடைய கேள்விகளை கேட்க்கத்தொடங்கினேன்.

நீங்க எந்த ஊரு? உங்க அண்ணன் தம்பி எல்லாரும் என்ன செய்றாங்க?
அண்ணன் பேரு க்ரிஷ்னா சானட்டோரியம் ரயில்வே ட்ராக்ல உக்காந்துருப்பான். தம்பி பேரு திரிஷா கூவத்தாண்ட ஒக்காந்திருப்பான்

இங்கே அமர கட்டணம் ஏதாவது தர வேண்டுமா?
கட்டணமா அறிவில்லையா நானே பீடி கூட வாங்க வக்கில்லாம முக்கி முக்கி போய்கிட்டுருக்கேன் கட்டணம் தற்றதாஇருந்தா நான் எதுக்கு இங்க வர்ரேன்.

இவர் தான் இன்றைய சாதாரணமானவர் :)


இந்த வேலை செய்வதால் வரும் கஷ்டங்கள் என்ன?
ரயில்வே ட்ராக்குலன்னா ஒன்னும் ப்ரச்சினை இல்ல.வயக்காட்டுல அடிச்சு வெரட்டிவுட்ருவானுக, அப்பாலிக்கா மழை காலத்துல எல்லாம் கொய கொயன்னு ஆகிடும்..... அட மண்ணு எல்லாம் சகதி ஆகிடும்னு சொன்னேன்பா

உங்களை மாதிரி மக்கள் இந்த ஊர் முழுக்க இருக்காங்களா? யார் உங்களுக்கு ஏரியா பிரிச்சு குடுப்பாங்க ?
ஒன்னு உட்டேன் மூஞ்சி கீஞ்சி எல்லாம் ஏரியா ஏரியாவா பிரிஞ்சிடும் .கை சுத்தமாகீதேன்னு பாக்குறேன். எங்க காலியாக்கீதோ அங்க பீடி வலிசுகினே குந்திக்கவேண்டியதுதான்.. அப்பாலிக்கா ஸாப்ட்டா பதில் சொல்றேனேன்னு இது மாதிரி காட்டு மொக்க  கேள்வி எல்லாம் கேட்டீன்னு வச்சிக்க அவ்ளோதான் .

உங்களது பொழுதுபோக்கு?
சரியான இடம் தேடி அலைவதே ஒரு த்ரில்லான அனுபவம் தான். உட்கார்ந்த பின் எதிரில் அமர்ந்திருப்பவர்கள் மீது கல் எறிவது மற்றும் அங்கே சிறு சிறு உருண்டைகளை உருட்டி விளையாடும் வண்டுகள் தான் எனது பொழுதுபோக்கு.

உங்களது இந்த தொழில் மறக்க முடியாத அனுபவம் ?
ஒரு வாட்டி ஹைஸ்கூலாண்ட போகும்போது அரிப்புபொடி போட்டு வச்சிட்டாங்க.டிக்கி டயப்பர் வாயன் டிக்கியவிட மோசமா பழுத்துருச்சு .இதெல்லாம் பழகிடுச்சு. தோட்டத்துல எல்லாம் போகும்போது பாதிலயே எழுப்பி விட்ருவானுக அது கொடுமைலயும் கொடுமை

அப்போது பக்கத்தில் ஒரு பெரியவர் வந்து அமந்தார் என்னை பார்த்ததும்

“தம்பீ கோச்சிக்கிறாதிங்க”   என்றார்

டெமோவின் போது ப்ரபல பதிவர் நான் :)


ஆகா இந்த வசனத்தை எங்கயோ கேட்ருக்கோமே என்று பார்த்தேன் அப்புறம் எவனாவது ப்ரபலபதிவருக்கு தெரிஞ்சவனா இருக்கப்போறான்னு விட்டுட்டேன்.
 கடைசியாக,
 பதிவுல போடனும் ஒரு ஃபோட்டோ எடுத்துக்கட்டுமா ? என கேமராவை வெளியே எடுத்ததும்

ஏண்டா இதெல்லாம் ஃபோட்டோ போடுவியா? அப்படி என்னடா சைட்டு அது ஓடிடு என வன்முறை காலாச்சாரத்தில் இறங்கினார்.

மின்னலென புறப்பட்டு ஒரு குறிப்பிட்ட தூரத்தை அடைந்ததும்
”ஏண்டா இப்படி ஊர நாறடிக்கிறியே உனக்கு வெக்கமா இல்ல?” என்றேன்

அவர் பொறுமையாக சொன்னார் : நீங்க இப்படி செஞ்ஜதே இல்லையா சார் !

சாதாரண மனிதர்கள் பேட்டி தொடறும் ....
                                      
                                                                         காடுவிரும்பல் காகன் ஆண்டர்ஸன்

குறிப்பு : வழக்குபோட நினைப்பவர்கள் முன்னதாகவே தகவல் தரும் பட்சத்தில் முன் ஜாமின் எடுக்க ஏதுவாக இருக்கும்..



Indli