Thursday, September 27, 2012

மான் வெஜ் ஆனா நான் நான்வெஜ் (27/09/1947) ப்ளூட்டோ




கூடங்குளத்தில் சொந்த   நாட்டு மக்களையே அடித்து தும்சம் பண்ணி இருக்கின்றார்கள்…
இந்த செய்தியை கேட்டதும் கூடங்குளத்தை தனி நாடக அறிவிக்கும்படியான கோரிக்கையுடன் ராஜபக்‌ஷேவை சந்திக்க சென்றேன் வெலிகடா
(Welikada ) ஜெயிலில் சாணி அள்ள வைத்திருக்கிறனர்.

*********************************************************************

அதிமுக  ஆட்சிக்கு வந்து    ஒன்றரை வருடங்கள் ஒடி விட்டன…. நாங்கள் ஆட்சிக்கு வந்தால்   ஆறு மாதத்தில் மின்வெட்டை போக்குவோம் என்றார்கள். இன்னும்  மின் வெட்டை சரி செய்த பாடில்லை… இதை எந்த ஊடகமும் கேட்க வக்கில்லை…  பல சிறு தொழில்கள் பாதிக்கப்பட்டு இருக்கின்றன..  அது கூட பராவாயில்லை.. நேற்று காலை பல் துலக்காமல் சாப்பிட அமர்ந்தேன் மனைவி கண்டுபிடித்து

”ஏண்டா பல் விளக்காமல் சாப்பிட வந்தாய்” என்றார்..



ஊஞ்சல் ஆடும்போது எடுத்தது 


கரண்டு இல்லத்ததால் என்றேன்.

 கரண்டுக்கும் பல்லு விளக்குவதற்க்கும் என்ன சம்மந்தம் என்றார்

 நான் உடனே சைக்கிள் டையனமோவில் பல் போன்ற அமைப்பு நீரின் உதவியால் சுழல்வதனால் மின்சாரம் வரும். அதேபோல்  இன்று மின்சாரம் இல்லாததால் நான் எனது பல்லை நீர் வைத்து சுழற்றவில்லை என்றேன்.

வெளக்காத பல்லுக்கு அறிவியல் விளக்கமா என விளக்கமாற்றால் விளாசி

சங்கிலியில் பிணைத்து வெயிலில் வாழைமரத்தில் கட்டிப்போட்டிருக்கின்றார். நண்பர்கள் வந்து காப்பாற்றவும்.


*********************************************************************



திரும்பவும் பெட்ரோல்  விலை 5 ரூபாய்க்கு ஏற்றப்போவதாக பெட்ரோலியா(மங்கோலியாவில் அண்டை நாடு)  நிறுவனங்கள் கொஞ்சிக்குலாவி அறிவிக்க  இருக்கின்றன… திரும்ப 78 ரூபாய் லெவலுக்கு போவும்ன்னு நினைக்கிறேன்.. இருந்தாலும் வண்டி ஓட்டித்ன் ஆவனும் இல்லைன்னா லாஸ் ஆப் பே தான். என்று ரோட்டில் ஒருவர் புலம்பிக்கொண்டிருந்தார்.



உடனே நான் பெட்ரோல் விலை ஏறினால் ஆப்பேக்கு (PIAGGIO APE) எப்படி லாஸ் ஆகும்? அது டீஸலில் தானே ஓடுகிறது என என்னுடைய எதிர்ப்பை நியாயமாக பதிவு செய்தேன்.

காதை கடித்து வைத்துவிட்டார்........
இது போன்ற மூடர்களை என்ன செய்வது?


*********************************************************************


கூடங்குள மக்கள் வாழ்வாதார பிரச்சனைக்கு போராடிக்கொண்டு இருக்கும் போது ஸ்ரீரங்கத்தில் தொடர்ச்சியாக அன்னதான விழாவை இனிதே நடத்தி நம்மை மெய் சிலிர்க்க வைத்து  இருக்கின்றார்... நம் முதல்வர் ஜெ  இந்த விஷயம் அறியக்கிடைத்ததும் உடனடியாக ஸ்ரீரங்கம் சென்று அன்னதானப்பந்தலை வட்டம் சுற்றத்தொடங்கினேன்.

மம்மியின் பாதுகாவலர்கள் பெட்டக்ஸில் எத்தி கால்வாயில் தள்ளினர்.
உடனே அங்கேயே உட்கார்ந்து பிடில் வாசிக்க தொடங்கினேன் முதல்வரின் பாதுகாப்பு கருதி வண்டலூர் பூங்காவில் கூண்டு எண் 19 ல் அடைத்துள்ளனர்




*********************************************************************
ஜெமினி பிளை ஓவர் கிட்ட இருக்கற பார்க் ஓட்டல்  கிட்ட ரைட் கட் பண்ணி சேம வேகத்துல வந்துகிட்டுஇருந்தேன்.. இரண்டு பேர் என்னை துரத்திகிட்டு  டேய் டேய் பண்ணாடன்னு கத்திகிட்டு  வந்தாங்க...  நானும் கடன்காரர்களாக இருக்குமோ என்று வேகமாக கொரங்கு பெடல் போட தொடங்கினேன் .
வாசகர்களுடன் அடியேன் :)))))

                                   
வள்ளுவர் கோட்டத்துகிட்ட வண்டியை நிறுத்தினேன்.. சார் நான் உங்க  வலை ரசிகர்...என்று பெயர் சொன்னார்...

அய்யோ நான் மீன் பிடிப்பதில்லையே என்றேன். பிடித்து பரங்கிமலையின் உச்சியிலிருந்து உருட்டி விட்டனர் 




*********************************************************************
நான்வெஜ் 18+


கிரிக்கெட் ஃபீவர் அடிக்கிறது என்று நண்பர் சொன்னார் உடனே க்ரோஸினுடன் அவரை பார்க்க சென்றேன் அசிங்கமாக திட்டினார் உடனே அவரை பழிவாங்க வேண்டி ஃபேஸ்புக்கிலிருந்து அவரை அன்ஃப்ரெண்ட் செய்து விட்டு கிரிக்கெட் என கூகுளில் தேடத்தொடங்கினேன்

”கிரிஜாவில் கிரவுண்டில் ஒரு கிரிக்கெட் மேட்ச்”

என்னும் கதையை படித்துக்கொண்டிருந்தேன் வேலையை விட்டு எடுத்திருக்கின்றனர்.

எனது வாசகர் வண்ணமுத்து



கிரிக்கெட் உலகக்கோப்பை நடக்கும் போது கூட கிரிக்கெட் பத்தின பதிவுகள் படிக்கக்கூடாதா... என்னா உலகம்டா இது?*********************************************************************

சமீபத்தில் பார்த்த வீடியோ, பதிவுலக பின்னூட்ட சண்டைகளை நினைவுபடுத்தியது

                                         
*********************************************************************
அன்புடன்

சாம் ஆண்டர்ஸன்

Tuesday, September 11, 2012

வெளிக்கிருப்பவர்-( Dirty-செய்பவர்) வாழ்க்கை அறியாத தகவல்கள்

சாரு நிவேதிதா எழுதிய தேகம் நாவலில் மலம் அள்ளுபவர்கள்  பற்றி எழுதியதை வாசித்துள்ளீர்களா? படித்துப் பாருங்கள். வாசிக்கும்போதே வயித்தை  பிசையும் எழுத்து. மலம் அள்ளுபவர்கள்  என்போர் எத்தனை பரிதாபமான ஜீவன்கள் என்று தெரியும்.

ஆனால் இன்று நாம் மலம் அள்ளுபவர்களைப்பற்றி பார்க்கப்போவதில்லை மாறாக ரயில்வே ட்ராக்கில் வெளிக்கிருப்பவர் ஒருவரை பேட்டி காணப்போகிறோம்




அந்த நபரை ஒரு ஞாயிறன்று வீட்டில் சமையல் செய்ய கழுதைக்கறி வாங்கி விட்டு திரும்பும் வழியில் பார்த்தேன். ஒல்லியான உருவம். கையில் சொம்பு. கைலியை பின்னாடி படாமல் தூக்கிப்பிடித்திருந்தார். மிக மெதுவான  நடை. அவருடன் பேசினால் என்ன என தோன்றியது. சைக்கிளுக்கு ஸ்டாண்ட் போட்டு நிறுத்தி விட்டு, நான் ஹிந்தியிலும் அவர் தமிழிலும் பேச , ஒரு நிமிடம்கூட தாக்கு பிடிக்க முடிய வில்லை. கடுப்பானவர் கைலி நாஸ்தி ஆனாலும் பரவாயில்லை என்று சொல்லி கன்னத்தை சேர்த்து ஒன்று கொடுத்தார்.

”நானே சொம்புல இருந்த தண்ணி கொட்டிப்போச்சுன்னு கழுவாம கூட வந்துட்ருக்கேன் என்கிட்ட வந்து கன்னடத்துல பேசிக்கிட்டு போ அந்தால” என அன்பாக மிரட்டினார்

இது சரிப்படாது என புரிந்து சற்று தூரமாக சென்று அவரை ”போடா வெண்ன” என்று திட்டிவிட்டு மின்னல் வேகத்தில் சைக்கிளை மிதித்து பறந்தேன். ஆனாலும் அவரின் அந்தக்கோலம் என் மனதில் பசுமரத்தாணி போல பதிந்த்தது .

 என்னுடைய மொபைல் கேமராவில் எடுத்தது :)

அவரை எப்படியாவது பேட்டி எடுத்து விட வேண்டும் என்று மாரி அம்மன் கோவிலுக்கு சென்று கங்கணம் கட்டிக்கொண்டு அவரை தேடத்தொடங்கினேன்.

கடைசியாக இன்று காலை அண்ணா நகர் ரவில்வேகேட் அருகில் உள்ள புதர் மறைவில் உட்கார்ந்திருந்த அவரை கையும் களவு(!)மாக பிடித்து என்னுடைய கேள்விகளை கேட்க்கத்தொடங்கினேன்.

நீங்க எந்த ஊரு? உங்க அண்ணன் தம்பி எல்லாரும் என்ன செய்றாங்க?
அண்ணன் பேரு க்ரிஷ்னா சானட்டோரியம் ரயில்வே ட்ராக்ல உக்காந்துருப்பான். தம்பி பேரு திரிஷா கூவத்தாண்ட ஒக்காந்திருப்பான்

இங்கே அமர கட்டணம் ஏதாவது தர வேண்டுமா?
கட்டணமா அறிவில்லையா நானே பீடி கூட வாங்க வக்கில்லாம முக்கி முக்கி போய்கிட்டுருக்கேன் கட்டணம் தற்றதாஇருந்தா நான் எதுக்கு இங்க வர்ரேன்.

இவர் தான் இன்றைய சாதாரணமானவர் :)


இந்த வேலை செய்வதால் வரும் கஷ்டங்கள் என்ன?
ரயில்வே ட்ராக்குலன்னா ஒன்னும் ப்ரச்சினை இல்ல.வயக்காட்டுல அடிச்சு வெரட்டிவுட்ருவானுக, அப்பாலிக்கா மழை காலத்துல எல்லாம் கொய கொயன்னு ஆகிடும்..... அட மண்ணு எல்லாம் சகதி ஆகிடும்னு சொன்னேன்பா

உங்களை மாதிரி மக்கள் இந்த ஊர் முழுக்க இருக்காங்களா? யார் உங்களுக்கு ஏரியா பிரிச்சு குடுப்பாங்க ?
ஒன்னு உட்டேன் மூஞ்சி கீஞ்சி எல்லாம் ஏரியா ஏரியாவா பிரிஞ்சிடும் .கை சுத்தமாகீதேன்னு பாக்குறேன். எங்க காலியாக்கீதோ அங்க பீடி வலிசுகினே குந்திக்கவேண்டியதுதான்.. அப்பாலிக்கா ஸாப்ட்டா பதில் சொல்றேனேன்னு இது மாதிரி காட்டு மொக்க  கேள்வி எல்லாம் கேட்டீன்னு வச்சிக்க அவ்ளோதான் .

உங்களது பொழுதுபோக்கு?
சரியான இடம் தேடி அலைவதே ஒரு த்ரில்லான அனுபவம் தான். உட்கார்ந்த பின் எதிரில் அமர்ந்திருப்பவர்கள் மீது கல் எறிவது மற்றும் அங்கே சிறு சிறு உருண்டைகளை உருட்டி விளையாடும் வண்டுகள் தான் எனது பொழுதுபோக்கு.

உங்களது இந்த தொழில் மறக்க முடியாத அனுபவம் ?
ஒரு வாட்டி ஹைஸ்கூலாண்ட போகும்போது அரிப்புபொடி போட்டு வச்சிட்டாங்க.டிக்கி டயப்பர் வாயன் டிக்கியவிட மோசமா பழுத்துருச்சு .இதெல்லாம் பழகிடுச்சு. தோட்டத்துல எல்லாம் போகும்போது பாதிலயே எழுப்பி விட்ருவானுக அது கொடுமைலயும் கொடுமை

அப்போது பக்கத்தில் ஒரு பெரியவர் வந்து அமந்தார் என்னை பார்த்ததும்

“தம்பீ கோச்சிக்கிறாதிங்க”   என்றார்

டெமோவின் போது ப்ரபல பதிவர் நான் :)


ஆகா இந்த வசனத்தை எங்கயோ கேட்ருக்கோமே என்று பார்த்தேன் அப்புறம் எவனாவது ப்ரபலபதிவருக்கு தெரிஞ்சவனா இருக்கப்போறான்னு விட்டுட்டேன்.
 கடைசியாக,
 பதிவுல போடனும் ஒரு ஃபோட்டோ எடுத்துக்கட்டுமா ? என கேமராவை வெளியே எடுத்ததும்

ஏண்டா இதெல்லாம் ஃபோட்டோ போடுவியா? அப்படி என்னடா சைட்டு அது ஓடிடு என வன்முறை காலாச்சாரத்தில் இறங்கினார்.

மின்னலென புறப்பட்டு ஒரு குறிப்பிட்ட தூரத்தை அடைந்ததும்
”ஏண்டா இப்படி ஊர நாறடிக்கிறியே உனக்கு வெக்கமா இல்ல?” என்றேன்

அவர் பொறுமையாக சொன்னார் : நீங்க இப்படி செஞ்ஜதே இல்லையா சார் !

சாதாரண மனிதர்கள் பேட்டி தொடறும் ....
                                      
                                                                         காடுவிரும்பல் காகன் ஆண்டர்ஸன்

குறிப்பு : வழக்குபோட நினைப்பவர்கள் முன்னதாகவே தகவல் தரும் பட்சத்தில் முன் ஜாமின் எடுக்க ஏதுவாக இருக்கும்..



Friday, August 24, 2012

பதிவர் மாநாடு 2012 சாம் அனுபவங்கள்


     கடந்த முறை பதிவர் சந்திப்புக்கு நான் தான் கடைசியாகப் பதிவு போட்டேன். அதனால் இந்த முறை நான் தான் முதலாவது ஆளாக இருக்க வேண்டும் எனப் பதிவர் சந்திப்பு துடங்கும் முன்னரே பதிவிடுகிறேன்.

பதிவர் சந்திப்புக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டத்திற்குப் பதிவர் மீனாட்சிபவன் மணிக்குமார் என்பவர் அழைத்திருந்தார். நானும் மீனாட்சிபவன் தானே என்று மீனாட்சிபவனில் தயிர் வடை சாப்பிட்டுக்கொண்டே காத்திருந்தேன்.... 

ஆனால் நெடுநேரமாகியும் அவர் வரவில்லை. சாப்பிட்ட பில் வேறு தர வேண்டும். உடனடியாக மீனாட்சிபவனுக்கு மிஸ்ட் கால் குடுத்தேன். அவர் திரும்ப அழைத்தார்.
“யோவ்... என் பேருதான்யா மீனாட்சிபவன். உடனடியா அனிமல் ப்ளானட் புக் பேலஸ்க்கு வந்துருய்யா” என்றார்.



“த்தா... ஏமாந்துட்டோமே” என முனகிக்கொண்டே பில் தராமல் தப்பிக்க வழி தேடிக் கக்கூஸுக்கு ஓடினேன். வெண்டிலேட்டர் வழியாக முகத்தில் கரித்துணியைக் கட்டிக்கொண்டு எஸ்கேப் ஆன போது பின்பக்கமாக கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த ரவுடிகள் காரணமேயில்லாமல் இரும்புக்கரம் கொண்டு என்னை நையப்புடைத்தனர்.
ரவுடி ஒருவனிடம், “எதுக்கு சார் அடிக்கிறீங்க?” என்றேன்.

“நாங்க தடையர தாக்க படம் பாக்கலன்னு நெனக்கிறியா?” த்தா ம்மா என்று அடியை கண்டின்யூ செய்தனர். (அவர்களுக்கு என் கண்டங்கள்)

பின்பு ஒரு வழியாக கூட்டத்துக்கு வந்து சேர்ந்த நான் ஆலோசனையில் என்னென்ன சமைக்கலாம் என்னும் விவாதத்தை தொடங்க முயன்றேன். போரூர் சானா ஆண்டர்சன் பக்கத்தில் அமர்ந்து இருந்தார். “மதியத்துக்கு எல்லாருக்கும் பிரியாணி போடலாம்” என்றேன் . “சாம்பில் குடு” எனக் கலவரத்தில் இறங்கினேன். அதைக் கூட்டத்தில் ஒருவர் மொபைல் ஃபோனில் புகைப்படம் எடுப்பதைப் பார்த்ததும் பம்மி அமைதியாக இருந்துவிட்டேன்.

அடுத்ததாக லோக்கல் பதிவர்களுக்குப் பரிசுத்தொகை அறிவிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தேன். அதை மறுத்து மூத்த பதிவர்களுக்கு மட்டும் தான் மரியாதை எனச் சொல்லிவிட்டனர்.


தயிர்வடை செரித்துப் பல நேரம் ஆகிவிட்டதால் மீண்டும் சாப்பாடு பற்றிக் கேட்டேன். போரூர் சானா முறைத்தார். உடனே புத்தகங்களை விசிரி அடித்துப் போராடத் தொடங்கினேன். கைலியப்பன் கைலியைக் கழற்றி முகத்தில் சுற்றி அடி பிரட்டி எடுத்து விட்டார். சரி என்று இரண்டு புத்தகங்களை திருடிக்கொண்டு ஓடத்தொடங்கினேன். ஹி ஹி ஹி

பதிவர் சந்திப்புத் தினத்தில் மண்டபத்துக்கு வந்தேன். வாசலில் இரு பெண்கள் பன்னீர் தெளித்தனர். உடனடியாக “அனானிகள் என் மீது தண்ணீர் ஊற்றித் தாக்குதல் நடத்துகின்றனர்” எனக் கூவத்தொடங்கினேன். நண்பர் காடு ரமேஷ்குமார் வந்து சாப்பிடும் அறைக்கு வழி காட்டினார். நடையைக் கட்டத் தொடங்கினேன்.




உள்ளே ஃபுல்லாக மக்கள் அமர்ந்திருந்தனர். அப்போது ஒரு பதிவரிடம் சென்று “உங்கள் பெயர் என்ன சகோ?” என்றேன். “பசிக்கலா” என்றார். “பசிக்கல பசிக்கலன்னு சொல்லிட்டே பந்தியில ஒக்காந்துருந்தா என்ன அர்த்தம்?” என்ற நியாயமான கேள்வி ஒன்றைக் கேட்டேன். தென்றல் புயலாக மாறி தாக்குதல் நடத்தத் தொடங்கியது.


சாப்பிட்டுவிட்டு முத்த பதிவர்களுக்கான பதிவுத்தொகையைப் பெறுவதற்காக மேடைக்குச் சென்று “யாரை முத்தமிட வேண்டும்?” எனக் கேட்டேன்.

அமைதியின் வடிவாய் இருந்த கவிஞர் மிதிமதி என்னைக் கால்மிதியாக மாற்றி மிதித்தார். பட்டிணத்தார் பாண்டி அட்டாக் பாண்டியாக மாறித் தாக்குதலை நடத்தினார். “அண்ணே மூத்த பதிவர தான் முத்த பதிவர்ன்னு நென்ச்சுட்டேன்”னு சமாளித்தேன்.

கொஞ்ச நேரம் கழித்து என்னிடம் மைக்கை கொடுத்தனர்.


“பதிவர்களே பதிவர்களே நீங்கள் என்னை அமேரிக்காவில் தூக்கிப் போட்டாலும் நான் லோக்கலாகத்தான் இருப்பென் STD ஆக மாற மாட்டேன்“ எனப் பாடிக்கொண்டே இருக்கும் போதே முட்டை மற்றும் அழுகிய தக்காளியால் அடித்தனர். துடைத்துவிட்டு வெளியேறும் போது அண்ணன் குண்டுக்கல் குணபாலன் வந்தார்.


கலக்கல்... நன்றி... (த ம ஓ 5 ) என்றார்.

“ஒன்னிய தாண் இவ்ளோ நாளா தேடிட்ருக்கேன் ” என விரட்டத் தொடங்கினேன். ஆனால் ஓடி மறைந்துவிட்டார்.


பின்பு பதிவர் கில்மாகுமார் வந்து “வாங்கண்ணே நம்ம தல இருக்கார் அவர்ட்ட பேசலாம்” என அழைத்துச் சென்றார். அங்கே,

ஆம் அவரே தான் குறுந்தாடியுடன் அல்டிமேட் ரைட்டர் நின்று கொண்டிருந்தார். “அண்ணே அடிச்சு ஜட்டிய கிழிச்சு வுட்டாங்கண்ணே” என்றேன். “அப்படியா நான் ஜட்டியே போடறதில்ல போட்டா CK தான்” என்றார். நானும் “அப்படியா நானும் CK தான்” என்றேன்.
“நான் சொன்னது CALVIN KLEIN” என்றார்.

அல்ட்டிமேட் ரைட்டருடன் நான் 


நான் “C.KARTHIKEYAN எங்க எதுத்த வீட்டுக்காரர்” என்றேன். அவரது ரியாக்‌ஷனைப் பார்க்கும் முன்னமே ஓட்டத்தை ஆரம்பித்தேன்.


Tuesday, June 26, 2012

கேபிள் ஆண்டர்சன்- குத்துப் பரோட்டா - 26/06/2012


   தமிழ்நாட்டில் வர வர மல்ட்டிப்ளெக்சுகளின் தொல்லை அதிகமாகிக்கொண்டே வருகிறது
டிக்கெட் இல்லாமல் உள்ளே செல்ல முடியவில்லை
ஓ எம் ஆர் ஏ ஜீ எஸ் மல்ட்டிப்ளெக்ஸில் சென்று காலை முதல் மாலை வரை ஓய்வெடுத்துக்கொண்டிருந்தேன் அப்போது காவலாளி பிடித்து
  ஒன்னும் வாங்கவும் மாட்ட இங்கயே ஏ சில ஒக்காந்துட்டு ஓடுடா 
என அடித்து துவைத்தார்
KFC போராட்டம் நான் நண்பர் கில்மாவுடன் (வலது & இடது)

உடனே அவரிடம்
பி வீ ஆர் மால் வர்ரவரதாண்டி உங்க ஆட்டம் என கத்திவிட்டு ஓடத்தொடங்கினேன் 

மால் மேனஜர் டிக்கி பஞ்சர் ஆகுமாறு எட்டி உதைத்தார்

பின்பு நேராக ஃபுட்கோர்ட்டிற்க்கு சென்று குடிநீர் கேட்டேன் இல்லை என்றனர் உடனே அங்கு சாப்பிடவருபவர்கள் அனைவரிடமும் சென்று

அண்ணே பர்கர்ல கோழி செத்து கெடக்கு இங்க வாங்காதிங்க

என்னும் மொக்கையை போட்டென் கக்கூஸ் வாளி நிறைய நீரை ஊற்றி துரத்தினர்

==============================

மீண்டும் ஒரு டெர்ரரான ரேப் கேஸ் ராணுவ வீரரின் மனைவியை AC காரில் வைத்து  மிரட்டி கற்பழித்திருக்கிறார்கள்
உடனே நானும் வாடகை காரை எடுத்துக்கோண்டு ராணுவ வீரரின் மனைவியை தேடத்தொடங்கினேன் இறுதியாக கண்டுபிடித்து காரில் ஏற்றிக்கொண்டு மிரட்டத்தொடங்கினேன்
தற்ப்போது புழல் சிறையில் உள்ளேன் கைதி எண் : ஏக் தோ தீன் (123)

அடல்ட் கார்னர்

குறிப்பு : மிரட்டும் போது மனைவியுடன் ராணுவ வீரரும் அமர்ந்திருந்தார் ஹி ஹி ஹி

==============================

கடந்த சில நாட்களாக சென்னையில் பெட்ரோல் தட்டுப்பாடு எல்லா பங்குகளிலும் உள்ளது என்வே ரேஷன் முறையில் பெட்ரோல் போடுகிறார்கள் என நண்பர் சொன்னார் உடனே நானும் ரேஷன் கார்டுடன் பெட்ரோல் பங்கை நோக்கி விரைந்தேன்.

 ஆனால் அங்கு லிட்டர் 75 ரூபாய் தான் என்றும் ரேஷன் கார்டு தேவையில்லை என்றும் சொன்னார்கள் உடனே கடும் கலவரம் செய்து
ரேஷன் கடையில் விலை குறைவாகத்தானே இருக்க வேண்டும்? அதனால்
 பங்கை மூடு பங்கை மூடு “ 
என்று கோஷமிட்டேன் 

பெட்ரோல் ஊற்றி கொளுத்த முயன்றனர் தலை தெறிக்க ஓடி தப்பித்தேன்
=============================

கடந்த வாரம் இயக்குனர் சேரனை ஒரு விழாவில் சந்தித்தேன் நான் தான் டேபிள் என்றேன்
அப்படியா கான்ஸ்டேபிளா எந்த ஸ்டேஷன்ல?


 என்று காமெடி(?) அடித்தார் அண்ணே இந்த காமெடிய உங்க படத்துல
 வச்சிருந்தா யாராவது பாக்குறமாதிரி இருந்திருக்கும் என்றேன்.

பின்பு அவரிடம் நான் எழுதிய “முரண்” திரைப்பட விமரிசனத்தினை காண்பித்தேன். ”ஆட்டோக்ராஃப்” சேரன் “யுத்தம் செய்” சேரனாக மாறினார்.
===============================
இருட்டுல சோறு

சென்னையில் பார்க் ஷெரட்டன் ஓட்டலில் கண்ணைகட்டி டின்னர் சாப்பிடும் உணவகம் தொடங்கி இருப்பாதாக நண்பர் ஒருவர் சொன்னார். சர்வர் கூட இருட்டில் தான் இருப்பர்கள் என அறிந்ததும் உடனடியாக சென்று ஃபுல்மீல்ஸ் சாப்பிட்டு விட்டு இருளோடு இருளாக மறைந்து வெளியேறினேன் வெளிச்சத்தில் நின்றிருந்த வாட்சுமேன் பிடித்து மேனேஜரிடம் ஒப்படைத்தார் அவரிடம்

 “அண்ணே நான் தான் சோத்த பாக்கவே இல்லையே அண்ணே அப்போ ஃப்ரீ தானே 

என்றேன் பாத்திரம் கழுவ வைத்திருக்கின்றனர்.
பாத்திரம் எல்லாம் சுத்தம் ஆனதும் மனநல காப்பகத்தில் சேற்க்க இருக்கின்றனர்

===========================


மொட்டை மாடியை வாடகைக்கு விடறீங்களா?
ஆம் உங்கள் மொட்டை மாடியை நீங்கள் வாடகைக்கு விடுவதன் மூலம். இந்தியாவின் மின்சாரத்தேவையை குறைக்கப் போகிறீர்கள். அதற்காக நீங்கள் எந்த முதலீடும் செய்யத் தேவையில்லை. ஆனால் பலனும், வருமானமும் நிச்சயம் உண்டு. உங்களுடய முதலீடு உங்களது மொட்டை மாடியை எங்களுக்கு அளிப்பதே என்கிறார்கள் Bridge to India நிறுவனத்தினர். உங்களது மொட்டை மாடியில் சோலார் பவர் தகடுகளை அவர்களே இன்ஸ்டால் செய்து அதன் மூலம் வரும் மின்சாரத்தை உங்களுக்கும் பகிர்ந்தளித்து அதன் மூலம் வரும் வருமானத்தையும் பகிர்ந்து கொள்கிறார்களாம்.

இந்த விளம்பரத்தை பார்த்தது பதிவர் ஜெட்லியை அழைத்துக்கோண்டு Bridge to India நிறுவனத்திற்க்கு சென்று

இந்த மொட்டை மாடியில் மின்சாரம் தயாரிக்க மாதம் எவ்வளவு பணம் தருவீர்கள்?

எனும் வினாவினை முன்வைத்தேன் இருவருக்கும் ஷாக் ட்ரீட்மெண்ட் ஏற்ப்பாடு செய்துள்ளனர்
 =====================================

                                               கேபிள் 

Friday, June 1, 2012

ஜரஜம் ஜாடிஜம் ஜெட்லிசேகர்

நான் சிறுவயது முதலே ஓசியுணவு(ஓசி + உணவு) விரும்பி உண்ணும் எனது அத்தை பையனுக்கு திருமணம் என்பதால் மனைவி குழந்தைகளை ஏற்றிக்கொண்டு எனது டிரை சைக்கிளை “செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்” பாடலைப்பாடிக்கொண்டே மிதிக்கத்தொடங்கினேன் ஆனால் மதுராந்தகம் வந்ததும் சைக்கிள் செயின் கழன்று சொதப்பியதால். மனைவி நடு ரோட்டில் வைத்து செருப்பை வாயில் கவ்வக்குடுத்து அடித்தார் அதனால் நான் தனியே பஸ்ஸில் செல்ல முடிவெடுத்தேன்

கோயம்பேட்டுக்கு சென்றேன் வண்டி பார்க்கிங் கட்டணம் 10 ரூபாயிலிருந்து 20 ரூபாய் ஆக்கீருந்தனை வாசக நண்பர் பார்க்கிங் பால்பாண்டியை அழைத்து மொக்கை போட்டேன் சரி பார்க் பண்ணிக்கோங்க என்றார் சரி என டிரை சைக்கிளை தள்ளிக்கொண்டு உள்ளே வந்தேன்



டேய் நான் பால்பாண்டி இல்லடா உனக்கு பரலோகப்பாண்டிடா என கத்திக்கொண்டே விரட்டினார் உடனே அவரை அனானிகள் லிஸ்டில் சேர்த்து ஸ்பேம் செய்து விட்டேன். 





நான் எப்படி ஊருக்கு செல்வேனென்றால் கடலூர் செல்லவேண்டுமெறால் பாண்டி பேருந்தில் ஏறி அமர்ந்து கொள்வேன் அப்புரமாக டிக்கெட் கேட்கும்போது 
“அய்யய்யோ தெரியாமா ஏறிட்டேன் அடுத்த ஸ்டாப்ல எறங்கிக்கறேன் என மாறி மாறி ஊர் போய் செர்ந்து விடுவேன்


பின்பக்கம் ஏறுகையில் கண்டக்டர் சீட் தான் சாய்ஸ்(இதே வாய் சில நாட்களுக்கு முன்பு டிரைவர் பக்கத்துலதான் ஒக்காந்து வருவேன்னு சொல்லுச்சேன்னு நீங்க கேக்கக்கூடாது ஏன்னா அது வேற வாய்) கண்டக்டரிடம் நீங்க இங்க உக்காருவிங்களான்னு கேட்டேன் அவரு ஆமா என்றார் உடனே அதை முகப்புத்தகத்தில் ஸ்டேட்டஸாக போட்டுவிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டேன். ஸீட் கிடைத்தது கடைஸியில் பேருந்தில் என்னையும் சேர்த்து மொத்தமே 5 பேர் தான் 

கடனே எழவே என அந்த சீட்டில் அமர்ந்தேன். பின்பக்கம் ஒரு அழகான இளம் பெண் வந்து உக்கார்ந்தாள். அவளை வழக்கம்போல பார்வையாலே கற்ப்பழிக்கத்தொடங்கினேன்... அவள் வீடியோகேம் ஜாய்ஸ்டிக்கை நோண்டுவது போல மொபைலை நோண்டிக்கொன்டிறுந்தாள்... உடனே நானும் எனது ஜாய்ஸ்டிக்கை நோண்டத்தொடங்கினேன்

பேருந்து கிளம்பியது புதுப்பேருந்து என்பதால் ஆட்டம் இல்லை உடனே நான் என்னுடைய மொபைலில் மெல்லிதாக ஆட்டமா தேரோட்டமா பாடலைப்போட்டு ஆடத்தொடங்கினேன்... கண்டக்டர் மற்றும் கல்லூரி மாண்வி இனைந்து கொலைவெறித்தாக்குதல் நடத்தினர்



நடனத்தின் போது


கண்டக்டரிடம் 55 ரூபாய் கொடுத்தேன் க்ண்டக்டர் என்னை ஒரு மாதிரியாக பார்த்தார் ஏண்டா இந்த செல்லாத நோட்ட எத்தனவாட்டிடா மாத்த முயற்ச்சி பண்னுவ 93 ரூபா குடுடா என்றார்... ஹி ஹி மறந்துட்டேன் அண்ணே மம்மி டிக்கெட் ஏத்தினத அதான் உங்கட்ட பல்ப் வாங்குனேன் என்றேன்

மொதல்ல டிக்கெட்ட வாங்குடா அப்புரமா மிச்சமெல்லாம் வாங்கலாம் என எட்டி உதைத்தார்..... கீச் ஒலியெழுப்பி அவருக்கு கிலியை ஏற்ப்படுத்தினேன்

திண்டிவனம் திண்டிவனம் என சத்தம் கேட்டது உடனே அங்கிருந்த பெட்டிக்கடைக்காரரிடம் பிஸ்ஸா இருக்கிறதா எனக்கேட்டேன் வாழ்வில் முதல் முறையாக அன்று கக்கூஸ் விளக்குமாற்றால் அடி கிடைத்தது
பின்பு கண்டக்டரிடம்  திண்டி ”வனம்” என்று பொய்யா சொல்கிறாய் எல்லாமே கடையா இருக்கிறது என்றேன் அவரது தோல்பை கிழிய கிழிய அடித்தார் உடனே அண்ணே சும்மா ஜோக்குன்னே ஹி ஹி என்றேன் அடியிலிருந்து விடை கிடைத்தது



அப்போது ஒருவர் என்னிடம் வந்து தம்பி கோவிசிக்குறாதீங்க எனக்கு சர்க்கரை இங்க இருந்து உச்சா பொய்க்க்லாமா என்றார்





அப்படியா எனக்கு சர்க்கரை கம்மி தான் அப்போ நான் கக்.. போய்க்கலாமா என காமெடியை அவிழ்த்து விட்டேன்.. காறித்துப்பினார்

அப்புரம் அவர் தள்ளாடியபடி ஜிப்பை அவிழ்த்துக்கொண்டிருந்தார் 

“நான் வேணா பிடிச்சிக்கவா” என்று திருட்டுப்பார்வை பார்த்தேன்

அவர் “தா...இப்போ ஒருத்தனுக்கு வாய் வெத்தலபாக்கு போடப்போகுது” என்றார்...  அமைதியானேன்

அடுத்து எனக்கும் அவசரமாக வர படிக்கட்டில் நின்று வேலையை ஆரம்பித்தேன் பின்னால் வந்த டாட்டா சுமோ ப்ரைட்டில் வந்தது அது என்னை நோக்கி ஒளிக்கற்றைகளி வீசியதும் ஃபுயூஸ் ஆனது..... றோஃபெல்(ROFL) 

அடுத்து அந்த பெண்ணிடம் மெயில் ஐடி வாங்கி போலி பெயரில் ஆபாச சாட்டிங்கில் இறங்கினேன் வினவு கும்பல் கையில் ஸ்க்ரீன்ஷாட் கிடத்திருக்கிறது விரைவில் பதிவாக வரும் 


ஜெட்லி சேகர்




Thursday, April 19, 2012

மான் வெஜ் ஆனா நான் நான்வெஜ் (18/04/1947) புதன்


ஆல்பம்.
தமிழக அரசு தமிழ்ப்பதிவர்களுக்கு  விருதுகளை அறிவித்து இருக்கின்றது...ஔவையார் விருதைப் பெற்று இருப்பவர் யார் தெரியுமா?
ஔவை பிராட்டி போல அனுதினமும் தமிழ்த் தொண்டு செய்யும் திரு.ஜெட்லிசேகருக்கு கொடுத்து இருக்கின்றார்கள்..இனி தமிழ் மெல்ல வாழும்... வாழ்த்துகள்.. ஔவையார் விருது பெற்ற திரு ஜெட்லி சேகருக்கு.






==============================


பெப்சி சங்கத்தை உடைத்தே தீருவோம் என்று தயாரிப்பாளர் சங்கத்தினர் ஒற்றைக்காலில் நிற்கின்றார்கள்.. நானும் வெயில் காலத்தில் பெப்சி சங்கத்தை உடைப்பது நியாயமல்ல என உதயகுமார் தலைமையில் கடும் போராட்டத்தில் இறங்கினேன். உடனே என்னையும் தலைவர் உதயகுமாரையும் இரண்டு நாள் கட்டி வைத்து அடித்தனர் .. இப்போது ஸ்டிரைக் வாபஸ் பெற்றுவிட்டார்கள்..பார்ப்போம் பொறுத்து இருந்து பார்ப்போம். என்ன நடக்கின்றது என்று..கூறிக்கொண்டே வடை பெற்றோம்....சாரி விடை பெற்றோம்.


பின்பு அது சரியான விடையா என ஒரு டீச்சரிடம் கேட்டேன். டிக்கி பிளக்க பிளக்க பிரம்பால் அடித்து துரத்தினர்..




=====================================


பதிவர் விந்தை மனிதன் கூஜாராம் திருமணத்துக்கு என்னால் போக முடியவில்லை.. சரியாக  அதே நாளில் எனது அந்தை பையன் (விந்தை,அந்தை) ஆந்தை திருமண நிச்சயதார்த்தம் கடலூரில் நடந்த காரணத்தால் என்னால் அதில் கலந்து கொள்ள முடியவில்லை. திருமணத்தில் காளான் பிரியாணி போட்டோம் நீதான் மிஸ் பண்ணி விட்டே என்று என்னை வெறுப்பேத்த கூஜாராம்  கேட்ட போது பதில் சொல்ல முடியாமல் தவித்த தவிப்பு இருக்கின்றதே... அவை கொடுமையான கணங்கள்.





==========================================


மிக்சர்
ஐபிஎல் சென்னையில் நேற்று கோலாகலமாக தொடங்கி விட்டது.. பத்தாவது படிக்கும் பசங்களின் பெற்றோர்கள் வெறுத்து போய் இருக்கின்றார்கள்.. பத்தாவது படிக்கும் ஆம்பளை பசங்க இஞ்சி தின்ன குரங்கு(ஜெட்லி சேகர்) கணக்கா முகத்தை வச்சிகிட்டு புத்தகத்தை வச்சிகிட்டு படிக்கறது போல நடிக்கறானுங்க. இந்த விஷயத்தை என்னுடைய பக்கத்து வீட்டுப் பத்தாவது மாணவன் பட்பனாதன் அம்மாவிடம் போட்டு கொடுத்தேன்.. அன்றைய பொழுது சந்தோசமாக சென்றது.

==========================================


ஏண்டா சும்மாவே வீட்டுல இருக்க எதுனாச்சும் வேலைக்கு போலாம்ல என்று மாமியார் காலையில் விளக்குமாற்றால் அடித்து வீட்டைவிட்டு விரட்டினார் .
மெட்ரோரயில் பணிகள் காரணமாக சென்னை அசோக்பில்லரில் இருந்து கோயம்பேடு செல்வதற்குள் போதும் போது என்றாகிவிடுகின்றது...என்னைக்குத்தான் இந்த மெட்ரோரயில்பணிகள் முடியும் என்று ஏக்கமாகவும் கடுப்பாகவும்  இருக்கின்றது என்று வீட்டு வாசலில் நின்று மாமியாரிடம் கூறினேன்.. மறுபடியும் என்னை அடித்து துவைத்தார்.


மிருகவதை சட்டத்தில் அவரை சிறையில் அடைதிருக்கின்றனர் (முதல்வர் மம்மிக்கு எனது வாழ்த்துக்கள்)
==============================
சாம் தி டேக்கர்

Tuesday, April 10, 2012

அட்ரா சக்க சி பி செந்திகுமார் பேட்டி காமெடி கும்மி பாகம் 1

1.சி பி என்பதன் விளக்கம் ?    

நான் +1 படிச்சப்ப.. நம்ப மாட்டீங்களே.. சரி சரி.. +1 படிக்கறேன்னு சொல்லிட்டு ஸ்கூலுக்கு போனப்ப ஃபர்ஸ்ட் குரூப் இங்கிலீஷ் மீடியம்ல 4 செந்தில்குமார் இருந்தாங்க ( ஏய்.. எல்லாரும் கேட்டுக்குங்க.. நான் இங்கிலீஷ் மீடியம்,
இங்கிலீஷ் மீடியம் பிரபல ரவுடி ஹி ஹி ) அதுல 2 பேரு இனிஷியலும் P தான்.. அதனால அவங்கவங்க தாத்தா பேரை செகண்ட் இனிஷியலா போடச்சொன்னாங்க.. எங்க தாத்தா பேரு ஆறுமுகம்.. A வருது.. என் பேர்ல ஏ வரலாமா? ஏன்னா நான் ஒரு கண்ணியமான, கவுரவமான ஆள் ஆச்சே ஹி ஹி( சொன்னா நம்பனும்) அதனால ஊர் பேரை சென்னிமலை (CHENNIMALAI) C  இனிஷியல்ல சேர்த்துட்டேன் ..  ( ஹூம்.. கேள்வி கேட்கறது ஈசி.. அதுக்கு பதில் சொல்றது ரொம்ப கஷ்டம்.. )


சா ஆ : சும்மா சொல்லாதிங்க பாஸ் ஸ்கூல்ல சிலுக்கு நடிச்ச பிட்டு படத்த பாத்து மாட்டிருப்பிங்க அதான் சிலுக்கு பிட்டு செந்தில் சி பி ஆகிடுச்சு ஹி ஹி ஹி 




2. .முதன்முதலாக நீங்க பார்த்த படம்? 

அது சரியா நினைவில்லை.. ஆனா எங்கப்பா சொன்னது எம் ஜி ஆர் நடிச்ச நாடோடி மன்னனாம்.. சண்டைக்காட்சி வந்த போது முன்னால் அமர்ந்திருந்த ஆளை செல்லமா அடிச்சேனாம் 



சா ஆ : அதுக்கப்புறமா முன்னாடி இருந்தவன் உங்க ரெண்டு பேத்தையும் வீடு வர வெரட்டி வெரட்டி அடிசிருப்பானே அத சொல்லல? ஹி ஹி ஹி 


3.இதுவரை எத்தனை படம் பார்த்திருப்பீர்கள் ?                                                       

அதுவும் கணக்குல வைக்க முடியல. 1992 ல இருந்து ரிலீஸ் ஆகற 90% படங்களை பார்த்திருப்பேன்னு நினைக்கறேன், அது போக எங்கப்பா கால கட்டத்து ஹிட் படங்கள் எல்லாமே பார்த்துட்டேன்.. 



சா ஆ :ஏன் உங்க அப்பா கால சதுர மற்றும் கால வட்ட படங்கள பாக்கலியா? அவ்வ்வ்வ்வ்




 
4.எத்தனை படத்துக்கு விமர்சனம் எழுதியிருப்பிர்கள் ?  
பிளாக்ல இதுவரை 140 படங்களுக்கும், சாவி வார இதழில் 29 படங்களுக்கும், இதயம் பேசுகிறது வார இதழில்  17 படங்களுக்கும், நியூ ஃபிலிமாலயா இதழில் 9 படங்களுக்கும் எழுதி உள்ளேன்  

சா ஆ: ப்ளாக்ல எவனாவது படிக்க வாய்ப்பு இருக்கு சாவி அண்ட்  நியூ ஃபிலிமாலயா சுத்தம் ஹி ஹி ஹி 



5.முதன்முதலாக விமர்சனம் எழுதிய படம் எது ?        

களவாணி ( பிளாக்ல) நல்ல நேரம் சதீஷ் அவர் பிளாக்ல  என்னை எழுத வெச்சார்.. அப்போ அந்த படம் எந்த வித எதிர்பார்ப்போ, பர பரப்போ இல்லாம வந்தது, படம் ரிலீஸ் ஆன அன்னைக்கே மாலை 3  மணிக்கு விமர்சனம் போட்டேன்.. களவாணி - சூப்பர் ஹிட் இதுதான் டைட்டில்.. நான் கணித்த படி படம் ஹிட், ஆனால் கேபிள் சங்கர் சார் தன் விமர்சனத்தில் அந்த படம் சுமார் தான் எனவும் அதன் வெற்றி குறித்து தன் சந்தேகத்தை வெளீப்படுத்தி விமர்சனம் செய்திருந்தார்.. அப்போ நான் சதீஷ் கிட்டே “ அய்யய்யோ, என் கணிப்பு தப்பா போயிடுச்சே, இப்போ என்ன பண்ண்லாம்?னு கேட்டேன்.அவர் வெயிட் பண்ணலாம்னார். ஆனா விகடன் விமர்சனம் வந்ததும் சமாதானம் ஆகிட்டேன்.


சா ஆ : அதுக்கப்புறமா கிட்டத்தட்ட எல்லா படங்கள்லயும் பல்பு வாங்குனத சொல்லவே இல்லையே..... 



6.முதன்முதலாக எழுதிய பதிவு நினைவிருக்கிறதா ? அந்த பதிவின் பெயர் ?

 சப்ப மேட்டர்.காம் எனும் இணையத்துக்காக  சினிமா நியூஸை கிண்டல் அடித்து ஒரு காமெடி கும்மி போஸ்ட் போட்டேன்.. 

சா ஆ : சப்ப மேட்டர் இப்படி மொக்க மேட்டர கோர்த்து உட்டன்களே அவ்வ்வ்வ் 

7.தங்களின் குடும்பம் பற்றி கூறுங்களேன் ?                                                             

 எனக்கு அம்மா, அப்பா, அக்கா, மனைவி,  மகள்  என்ற சொந்தங்களில் அப்பா இறந்து விட்டார்.. அக்கா ஈரோட்டில் அரசு பள்ளி ஆசிரியர், மனைவி ஈரோடு தனியார் கல்வி நிலைய ஆசிரியை..அம்மா டெய்லர்.. மகள் பெயர் அபிராமி 3 ஆம் வகுப்பு படிக்கிறார்

சா ஆ: வாழ்த்துக்கள் உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு....

நண்பர் “பன்னி-பக்ஸ்”

8.அட்ராசக்க என்ற பெயரை தேர்வு செய்ய காரணம் எதாவது இருக்கிறதா ? இருந்தால் கூறுங்களேன் ?    

 நான் கவுண்டமணி  ரசிகன்.. மதுரை வீரன் எங்க சாமி படத்தில் அவர் அடிக்கடி அட்ரா சக்க அட்ரா சக்க என்ற டயலாக்கை சொல்வார்.. படம் செம காமெடி ஆனாலும் அந்த கால கட்டத்தில் அது சுமாரா தான் போச்சு டைட்டில் முக்கிய காரணம் .. அதையே ப்ளாக் நேம் ஆக்கிட்டேன்.. நான் எழுதும் ஒவ்வொரு மேட்டரும் அட்ரா சக்க என எல்லாரும் சொல்லும்படி இருக்கனும்னு நினைச்சேன்.. ஆனா பெரும்பாலும் போட்றாண்டா மொக்கை என  திட்டும்படி ஆகிடுது அவ்வ்வ் 

சா ஆ:இப்பொ எதுக்கு மேட்ச் ஆகுதோ இல்லயோ உங்கள எல்லாரும் அடிச்சு சக்கயா புழிஞ்சு எடுக்குரதுக்கு அல்லது இனிமே புழிஞ்ஜு எடுக்குரதுக்கு இது சூப்பர் டைட்டில் பாஸ் 

9.விமர்சனம் எழுதுனதிலேயே மிகவும் திருப்தியாக உணர்ந்த படம் எது ?     

வ குவாட்டர் கட்டிங்க் காமெடி படம் தான். ஆனா படம் ஓடலை.. அதுல வந்த காமெடி வசனங்கள் அனைத்தையும் நினைவு வைத்து போட்டது ரொம்ப சவாலா இருந்துச்சு.. ஏன்னா என் மெம்மரி கெப்பாசிட்டி ஆரம்பத்துல 20 டூ 25 வசனங்கள் தான் தாங்குச்சு.. ஆனா இந்த படத்துல தான் முதன் முதலா 45க்கும் மேற்பட்ட ஜோக்ஸ் ஞாபகம் வெச்சு எழுதுனேன்..

சா ஆ : அப்பு...அத நாங்க சொல்லோனும் நீங்களா சொல்லிக்க கூடாது... ஆமாஆந்த ஜோக்ஸ் எத்தன பேரு படிச்சிருப்பங்கன்னு நினைக்கிறீங்க ஒரு பய படிச்சிருக்கமாட்டான்

  10.விமர்சனம் எழுதுனதிலேயே மிகவும் மொக்கையாக உணர்ந்த படம் எது ?
  
நாம புடுங்கற எல்லாமே தேவை இல்லாத ஆணிகள் தான்.. மொக்கை ப்படமா அமைஞ்சுட்டா விமர்சனத்துல காமெடி கலந்து சமாளிச்சுக்குவேன், படம் தான் போர் அடிக்கனுமே தவிர பட விமர்சனம் போர் அடிக்கக்கூடாதுன்னு கவனமா இருப்பேன். ஆனாலும் என்னையே கதி கலங்க வைத்த மொக்கைப்படம் 365 காதல் கடிதங்கள் ..ராமராஜன்,பவர் ஸ்டார் படங்கள்க்கு விமர்சனம் எழுதமாட்டேன்,ஹி ஹி 


சா ஆ : கிட்டத்தட்ட எல்லா விமர்சனங்களுமே மொக்கை தான் . ராமராஜன் பவர் ஸ்டார் நான்(சாம் ஆண்டர்சன்) எவ்வளவோ பரவாயில்லை

Indli