Monday, November 14, 2011

தொட்டு பார்த்தேன் சுகமாக இருந்தது

இது எனது வாழ்வில் நடந்த உண்மை கதை 
செமஸ்டர் விடுமுறை....


பொதுவாகவே விடுமுறைக்கு முதல் நாள் இருக்கும் ஆர்வம் விடுமுறை அன்று இருப்பதில்லை, இதில் விடுமுறை முடிந்து செமஸ்டர் தேர்வுகள் வேறு என்றால் சொல்லவா வேண்டும்?


ஒரு மாலை பொழுதில் மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தை வந்து அடைந்தேன் அங்கே தேனி செல்லும் பேருந்துகளில் அரசு பேருந்துகளை மக்கள் மதிப்பதில்லை. தனியார் பேருந்துக்கு வரிசை கட்டி நிற்கின்றனர்..


தேனி மட்டும் ஏறுப்பா.... 


முன்னந்தலையில் கொஞ்சம் வழுக்கையும் பின்னால் பன்க் முடியும் வைத்திருந்த கண்டக்டர் பயணிகளை மிரட்டிகொண்டிருந்தான்


என்னை பார்த்ததும் முன்னமே பழக்கம் இருந்ததால் உரிமையுடன் எனது மடிக்கணினி பையை 
வாங்கி


டேய் ஊட்டி இத நாலாவது சீட் ஜன்னல்ல வைடா... என்று கிளீனரை அரற்றினான்


ஏற்கனவே சீட் போட்டுருக்கு பாண்டி ... என்றான் 


வைடா பாத்துக்கலாம்... என்றான் கண்டக்டர் 


சீட் போடப்பட்டது...


ஜன்னல் சீட் அறுபது வயது பெரியவரால் ஆக்கிரமிக்கப்பட வேறு வழியின்றி பேருந்து தொலைகாட்சியில் மூழ்கினேன்


படம் போடப்பட்டது.... சந்தோஷ் சுப்ரமணியம் 


எனது வரிசைக்கு அருகிலுள்ள வரிசையில் ஜன்னலருகில் ஒரு ஆண் 30 வயது இருக்கலாம் சின்ன பாப்பா போல ஜன்னல் சீட்டை வேடிக்கை பார்ப்பதை பார்த்தால் சரியான ஈத்தரை என தோன்றியது
அருகில் 25  வயது மதிக்க தக்க பெண் அப்புறமாக ஓரத்தில் 20 வயது  பருவமங்கை அநேகமாக அந்த பெண்ணின் தங்கையாக இருக்கலாம், அழகுன்னாலும் அழகு அவ்வளவு அழகு


பேருந்து கிளம்ப தயாராக இருந்தது...


உசிலம்பட்டி ஆண்டிபட்டி எல்லாம் எறிக்க...  சொன்னதும் படையெடுத்து வந்து பேருந்தை நிரப்பியது ஒரு கூட்டம் 


ஜெனீலியாவா இல்லை தேனிகார புள்ளயா? 


ஜெயிச்சது என்னமோ தேனிகார புள்ள தான் .... 
திடீரென தொடர்ச்சியாக அவளிடம் இருந்து உச்ச் சத்தம் கேட்க என்னருகில் இருந்த மலையூர் மம்பட்டியானை தாண்டி பார்வையை ஓட விட்டேன் 


அங்கே ஒரு பன்னி பயல் அவளிடம் சொல்லுவதற்க்கே கூசும் அளவிற்கு சில்மிஷத்தில் ஈடுபட்டிருந்தான் 


அவளது பிரச்சனையை அங்கே இருந்த யாரும் கண்டு கொண்டதாக தெரியவில்லை.


அவள் அருகில் இருந்த தம்பதிகள் கண்டுகொள்லாததில் இருந்து இருவருக்கும் சம்மந்தம் இல்லை என தெரிந்தது 


ஒரு கணம் கூட தாமதிக்க வில்லை 


என்னடா பண்ற என்று அவனை அடிக்க கையை ஒதுக்கியது தான் தாமதம்.... முஷ்டியை மடக்கி ஒரு குத்து எனது கண்ணுக்கு கீழே, மயக்கமே வந்து விட்டது எனக்கு 
ஆனாலும் சுதாகரித்து எழுந்தேன் ஆனாலும் பேருந்தில் யாரும் கண்டுகொள்ளவே இல்லை 


ஹா ஹா ஹாசினி என்ற வசனத்தை கேட்டு சிரித்து கொண்டிருந்தனர்.... 


கண்டக்டர் பாண்டி வேகமாக முன்னேறி வந்து ஒக்காபு*****  இதுக்குன்னே பஸ்சுல வரின்களாடா என்று சொன்னவுடன் சில சமூக  ஆர்வலர்கள் ஆங்காங்கே முளைத்தனர் 


ஆனாலும் எல்லாரும் அவனை கேட்ட வார்த்தைகளால் வசை பாடுவதில் தான் குறியாக இருந்தனரே தவிர என்னை யாரும் கண்டுகொள்ளவில்லை 


அந்த காம வெறி பன்னி இறக்கிவிடப்பட்டது. அந்த பெண்ணை இடம் மாற்றி ஜன்னல் அருகில் அமர்த்தினர்


கண்டக்டர் மெல்ல என்னிடம் வந்து "இதெல்லாம் தேவயா பாஸ் " என்று சொல்லிவிட்டு 


செக்கானம் எல்லாம் எறங்குப்பா..  என்று வேலை கவனிக்க சென்று விட்டார் 


நான் அந்த பெண்ணை பார்த்தேன் அடி வாங்கின அவமானம் எனக்கு வலியை விட அதிகமாக இருந்தது 


அவள் கண்களில் கண்ணீர் தாரை தாரையாக ஊற்றியது எனக்கு என்னமோ அதில் எனக்கும்  கண்டிப்பாக பங்கு உண்டு என தோன்றியது 


அதன்பின் அவளை பார்க்கவில்லை வலியில் தூங்கிவிட்டேன் தேனி பேருந்து நிலையம் வந்து தான் கண்டக்டர் எழுப்பினார். அவளை தேடினேன் காணவில்லை.. 


போய்டா போல இருக்கே ? அதுவும் நல்லது தான் என்று மனதுக்குள் கூறியபடியே எழுந்தேன் 


"பாஸ் ஆசுபத்திரி போய்ட்டு போங்க " சரி பாஸ் என்று சொல்லிவிட்டு கீழே இறங்கினேன் 
அப்படியே நேரா போயி நாகர்ல சாப்புடலாமா இல்ல இந்த பக்கமா கட் பன்னி போய் எவரெஸ்ட்ல சாப்புடலாமா அப்படின்னு யோசிச்சுட்டு இருக்கும் போது ஒரு குரல் கேட்டது


ரொம்ப நன்றி சார் ஒரு 25 வயது இளைஞன் கூடவே ஒரு வழுக்கை தலை ஆள் அப்புறமா அந்த பெண் 


இளைஞன் அவளது அண்ணனாக இருக்கலாம் நடுத்தர குடும்பம்


வாங்க ஹாஸ்பிடல் போகலாம்? அந்த பெரியவர் சொன்னார்..


இல்லைங்க பரவாயில்ல சரியாகிடும். எனக்கு பஸ்சுக்கு வேற நேரமாகிடுச்சு என்று கூறிவிட்டு அவர்களிடமிருந்து விடைபெற்று திரும்பினேன் 


அதற்குள் அந்த மூவரும் திரும்பி நடக்க தொடங்கியிருந்தனர் ...
தொலைவில் அந்த பெண் திரும்பி திரும்பி என்னையே பார்ப்பது தெரிந்தது... காயத்தை தொட்டு பார்த்தேன் சுகமாக இருந்தது 


Tuesday, November 8, 2011

Tucker and Dale vs Evil (2010) ( நீங்கள் தற்கொலை செய்யப்படலாம் ஜாக்கிரதை )

ஆங்கில படங்களை வகை பிரிக்க சொன்னால் எதனை வகையாக உடனே தரம்  பிரிப்பீர்கள் Comedy,Horror,Romance,Action  வேற அவ்ளோ தானா..! (அஜால் குஜால் அப்டின்னு சொல்றவங்க என்கூட சேர கூடாது. நான் நல்ல பையன் ) இந்த அனைத்து வகையான ரசிகர்களுக்கு  விருந்து படைக்க வந்த வந்த படம் தான்Tucker and Dale vs Evil

கதை: டக்கர் மற்றும் தேவ்(DAVE) இருவரும் தங்களுடைய விடுமுறை கொண்டாட தங்களுடைய காட்டு காயிலாங்கடையை (Rest House) நோக்கி பீர் சகிதமாக புறப்படுகின்றனர்... இதில் டக்கர் தான் அசிங்கமாக இருப்பதாக தாழ்வு மனப்பான்மை உடையவனாக இருக்கிறான்...  இதே நேரம் காட்டுக்குள் 5 ஆம்பள 3  மட்டும் பொம்பள காலேஜ் குழந்தைகள் தங்களது வார இறுதி நாட்களை கொண்டாட அதே காட்டுக்குள் வருகின்றனர் (படத்தில் College Kids என்று தான் சொல்லபடுகிறது) 
அவர்கள் கரடு முரடான டக்கர் மற்றும் தேவ் பார்த்ததும் சீரியல் கில்லர்கள்  என நினைக்கின்றனர் கோர்வையாக வரும் காட்சிகளும் இதற்க்கு ஏற்றார் போல் அமைய ,காமெடி அதகளம் நடக்கிறது.இத்தனைக்கும் படம் நெடுக வரிசையாக மரணங்கள் ஆனால் ஒவ்வொருத்தர் இறக்கும் பரிதாபம் வரவில்லை மாறாக சிரிப்பு வருகிறது (சிரிப்பு வரவில்லை என்றால் நல்ல டாக்டரை பார்ப்பது நலம்)

மரணம் என்றால் மரத்திலிருந்து குதித்து அல்லது விஷம் குடித்து சாவது அல்ல

மரணம் 1.கழுத்து வழியாக கதி குத்தப்பட்டு கடைசி சொட்டு இரத்தம் வரை வழிகிறது

மரணம் 2.மரம் வெட்டும் எந்திரத்தில்(WOOD CHOPPER) உடல் அறைக்கபடுகிறது 

மரணம் 3.தலையில் ஆணி அடங்கிய பலகை குத்தபடுகிறது இன்னும் கொடுமையான 8 மரணங்கள் 


ஆனால் இதை எல்லாம் பார்த்தால் கண்டிப்பா சிரிப்பு மட்டும் தான் வருகிறது அவ்வளவு அழகான காட்சிகள் நகைச்சுவை உணர்வுடன் படமாக்கபட்டுள்ளது 

டிரைலரை பார்த்ததும் இது வெறும் த்ரில்லர் படம் என நினைத்தால் ஏமாற்றம் மட்டும் தான் மிஞ்சும் 


தேவ் தக்கருக்கு தன்னம்பிக்கை ஊட்டுவதும்.. அழகான ஹீரோயின் கேத்ரினா ப்வ்டன் (கேத்ரினா  கையிப் இல்ல) டக்கரை காதலிக்க ஆரம்பிப்பதும் செமையான காட்சிகள் 

நட்பும் காதலும் நம்ம சசி குமார் படங்களை ஞாபக படுத்தும்............


ஏழாம் அறிவு படத்தில முழு நீள கதையாக எடுத்துக்கொண்ட ஜீன் பற்றின உண்மைகளை இவ்வளவு தெளிவாக அனால் ரொம்ப சாதாரணமாக சொல்லிருக்கிறார்கள் படத்தில் சில ரக வசனங்கள் இருக்கிறது காட்சிகள் இல்லை ஒரு லாங் டாப்லெஸ் காட்சி தவிர 


வசனம் உதாரணம் :அழகான பொண்ணுங்கள எல்லாம் இவனுக தள்ளிட்டு வந்துட்டானுகன்னா நாம எல்லாம் என்ன டாய்லெட்லேவா இருக்கறது?

இன்னொரு வசனம் தேவ் அழுது கொண்டே வந்து நம்ம வீட்ட சுத்தி காலேஜ் பசங்க தற்கொலை பண்ணிக்கிறாங்க அப்டின்னு சொன்னதும் டக்கர் முகபாவம் கிளாஸ்...

மொத்தத்தில் "Tucker and Dale vs Evil ...This Vocation Sucks"

Movie Details:

Directed byEli Craig
Produced byMorgan Jurgenson
Albert Klychak
Rosanne Milliken
Deepak Nayar
Written byEli Craig
Morgan Jurgenson
StarringAlan Tudyk
Tyler Labine
Katrina Bowden
Jesse Moss
Chelan Simmons
Music byMichael Shields
Andrew Kaiser
CinematographyDavid Geddes
Editing byBridget Durnford
StudioEden Rock Media
Looby Lou
Reliance Motion Picture Company
Urban Island
Distributed byMaple Pictures
Release date(s)January 22, 2010
Running time88 minutes
CountryCanada
LanguageEnglish
Box office$4,163,177படத்தின் டிரைலர் 


டிஸ்கி : இது என்னுடைய முதல் விமர்சனம் தவறுகள் இருந்தால் சுட்டி காட்டவும் Wednesday, November 2, 2011

இதுக்கு முன்ன ஊர்ல கட்டவண்டி ஓட்டினியா....

ஓசூரில் இருந்து பெங்களுருக்கு சேலம் கோட்ட அரசு பேருந்தில் நான் (வழக்கம் போல ஓசியில்) பயணம் செய்தேன்.. அப்போது பேருந்து வெகு நேரம் டிக்கெட் ஏற்றிக்கொண்டு இருந்தது.. டிரைவர் வண்டியை அரக்கி அரக்கி நகர்த்திக்கொண்டு இருந்தார்... டிக்கட் வாங்கிக்கொண்டு பேருந்தில் உட்கார்ந்திருந்தவர்களை பார்க்கும் பொது எனக்கு சிரிப்பு சிரிப்பாக வந்தது 
சரி போனால் போகின்றது என்று அமைதியாக இருந்தால் பைபாஸ் பாலங்களை தவிர்த்து கர்நாடக எல்லையில் இருக்கும் சின்ன சின்ன ஊர்களில் எல்லாம் நிறுத்தி மெஜஸ்ட்டிக் மெஜஸ்ட்டிக் (ஏதாவது பிட்டு பட தலைப்பாக இருக்குமோ?)என்று தொண்டை தண்ணி வற்றுவது போல கத்திக்கொண்டு இருந்தார்...

நான்  பேருந்தில் கண்டக்டர் உட்காரும் முன் சீட்டில்  உட்கார்ந்து கொண்டேன்..டிரைவர் ஹான்சை வாயில் அடக்கி கொண்டு சாது போல அமைதி காத்த படி பேருந்தை ஓட்டினார்...டிக்கெட் போட்டு ஸ்டெஜ் குளோஸ் செய்து விட்டு மேல் வந்து கண்டக்டர் தனது இருக்கையை கேட்டார். சட்டம்  பேசினேன் அடித்து துவைத்து துரத்தி விட்டனர்.... இருந்தும் பஸ்ஸில் 45 வயது மதிக்கத்தக்க இரண்டு ஆண்டிகள் இருந்ததால் நான் என்ஜீன் மீது அமர்ந்து கண்டக்டரிடம் பேச்சு கொடுத்தேன்...


ஏன் இத்தனை ஸ்டாப்பில் நிறுத்தி செல்லுகின்றீர்கள் என்று கேட்டதுதான் தாமதம்.. மடை திறந்த அணையில் இருந்து சீறிப்பாயும் நீரை போல அந்த டிரைவரும் கண்டக்டரும் சேர்ந்து என்னை அடி பிரட்டி எடுக்க ஆரம்பித்து விட்டார்கள். அந்த டிரைவர் போட்டிருந்த மாவாவை துப்பி அடித்தார்...

ஏன்டா காசு குடுத்து டிக்கெட் எடுதவங்களே பொத்திக்கிட்டு வராங்க  ஓசில  வர்றவன்  உனக்கு என்னடா பெரிய காரணம் சொல்லனும்னு  அடி அடின்னு அடிச்சுட்டாங்க 

நான் சொன்னேன் :நாங்களும் மனுங்கதான் சார்.. வேனும்னேவா டிக்கெட் எடுக்காம வர்றோம் ...?? என்ன செய்ய???  சில பொறம் போக்குங்க படிச்ச திமிர்ல எங்களை வாட்டி எடுக்கறானுங்க..?? சார் டிக்கெட் சார் டிச்கேட்ன்னு  கேட்டு வாங்கிடராணுக.
அவனுக டிக்கெட் எடுக்கரதுனால எங்களுக்கு கெட்டபேர்.....  

சார் நாளும் கிழமைன்னா பராவாயில்லை இல்லை விடுமுறை நாள் என்றால் கூட டிக்கெட் வாங்க சொன்னா எப்படி  ... கூட்டம் அலை மோதும் அன்னிக்கு பிரச்சனை இல்லை.. ஆனா சாதாரண நாளில் டிக்கெட் எடுன்னு சொன்ன நாங்க என்னசார் செய்யறது..????

தனியார் பஸ் டிக்கெட் வாங்கறாங்கன்னு சொல்றாங்க .. ஏன் இருக்காது... இங்க மெயின்டெயின் செய்யவும் பேர் பார்ட்டஸ் மாத்திகொடுக்கவும் நாங்க டிக்கெட் எடுக்கணுமா...?இவ்வளவு பேசியும் அவர்கள் என்னை ஒன்னும் சொல்லவில்லை நண்பன் வித்தவுட் வீராசாமி அவர்கள் எனக்கு ஆதரவாக பேசியது ஒரு காரணமாக இருக்கலாம்.(அவருக்கு என்ன நன்றிகள்)

அவர்கள் பொறுமையாக  இருந்தது எனக்கு பிடித்திருந்தது திடீரென  "இதுக்கு முன்ன ஊர்ல கட்டவண்டி ஓட்டினியான்னு" சொல்லிட்டு இறங்கி ஓடினோம் நானும் நண்பர் வித்தவுட் அவர்களும் .. ஆனால் துரதிர்ஷ்டம் விரட்டி பிடித்து விட்டனர் 20 வருஷம் ஓட்டி சர்விஸ் வச்சி இருக்கும் டிரைவர்கிட்டயாடா மோதுரன்னு .... குமுறி எடுத்து விட்டனர்....

நானும் நண்பரும் கதறி அழுதோம் பொதுமக்களுக்கு ரயில் எப்படியோ அப்படித்தான் பஸ்சும் .. ஆனா  எங்களை விட திருட்டு ரயில் பயணம்  செய்பவர்களுக்கு , எங்களை விட சிரமம் கம்மி.. ஆனா எங்களுக்கும் அவுங்களை விட சிரமம் அதிகம்.

டீ விலை இரண்டு ரூபா வித்த காலத்துல இருந்து நாங்க ஓசியில தான் டீ குடிக்கறோம் ..இன்னைக்கு அப்படியா டீ ஐந்து ரூபாய்க்கு விக்கறான்(அவன் எவ்வளவுக்கு  வித்தா எனக்கென்ன நமக்கு எப்பவுமே ஓசி டீ தான் ) என்று சம்மந்தம் இல்லாமல் பேசியபடியே பயணம் தொடர்ந்தது.... 


கடைசியாக பேருந்து நின்றதும் அதுக்குள்ளே சென்னை வந்துருச்சான்னு கேட்டது தான் மிச்சம் மொத்த பேருந்து நிலையமும் செருப்பால் அடிக்க தொடங்கிவிட்டனர்...... நண்பர் வித்தவுட் உட்பட அப்போ தான் கண்டக்டர்  சொன்னார் "ஏன்டா முக்கா மொட்டையா நான் அங்க இருந்து பைபாஸ் பாலங்களை தவிர்த்து சின்ன சின்ன ஊர்களில் எல்லாம் கூட  நிறுத்தி மெஜஸ்ட்டிக் மெஜஸ்ட்டிக் என்று தொண்டை தண்ணி வற்றுவது போல கத்திக்கிட்டு இருக்கேன் இங்க வந்து சென்னைனா கேக்குற? என்றார்.....
இப்ப்போ சொல்லுங்க நண்பர்களே நான் செஞ்சது தப்பா????????????


டிஸ்கி: இன்னும் ஒரு வாரம் மெஜஸ்ட்டிக் பேருந்துநிலையம் அருகில் உள்ள சிட்டுகுருவி லாட்ஜ்  அறை எண் 318  வாசலில் தங்கி இருப்பேன் சந்திக்க விருப்பமிருப்பவர்கள் ட்வீட்டவும்.....    

நன்றிகளுடன் 
சாம் 

Indli